பாதிரியார்களுக்கு மன்னிப்பா ?

Thursday, November 10, 2016

கத்தோலிக்க கூட்டமைப்பின் கீழ் இயங்கும் அனாதை விடுதிகள்,முதியோர் இல்லங்கள்பள்ளிக்கூடங்களில் பாலியல் கொடுமைகள் நடப்பதாக புகார்கள் எழுவது தொடர்கதையானது.
கிருத்துவ மதத்தில் கடவுளுக்கு நிகராக கருதப்படும் பாதிரியார்கள்,பாலியல் வன்முறைகளிலும்நிதி மோசடிகளிலும்ஈடுபடுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில்,சர்ச்சுகள்கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான நன்மதிப்பு குறைந்து வருகிறது.
வாடிகன்:ஜெர்மனிஅயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில்கத்தோலிக்க பாதிரியார்கள்சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டதற்காக,போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.ஜெர்மனிஅயர்லாந்து,ஆஸ்திரியாநெதர்லாந்துசுவிட்சர்லாந்துஅமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள்பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
குறிப்பாகஅயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில்இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார்,இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
போப் பெனிடிக்ட்,ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல்1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர்பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, 'போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்எனஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ்பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், 'பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
'உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். மக்கள்,தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களை தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என,அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும் படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Read more...

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க

About This Blog

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம் (இதை அவர்கள் விளங்க மாட்டார்களா ? திருக்குர்ஆன் 36:68

Lorem Ipsum

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும்,வீனும் தவிற வேறில்லை.(இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?. 6.32

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP