நபிகள் நாயகம்(ஸல்)

Thursday, March 25, 2010


யாரெல்லாம் ஒரு கொள்கையை அறிமுகம் செய்து முன்னெடுத்து செல்கிறார்களோ ,அந்த அறிமுகத்தினால் யாரெல்லாம் புகழ் அடைகிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களைத்தான் முன்நிறுத்தக் கூடிய காட்ச்சிகளை நாம் பார்க்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் ஒரு வித்தியாசனமான அதிசய மனிதர். அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்தவில்லை.அவர்கள் ஒர் கொள்கையைச் சொன்னார்கள். அந்த கொள்கையை சொன்னதால் என்ன என்ன காரணங்கள், நோக்கங்கள் எல்லாம் இருக்கும் என்று நாம் சந்தேகப் படுவோமோ, அந்த காரணங்கள் அனைத்திற்கும் அப்பால் பட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துவிட்டு செல்கிறார்கள். ஒரு மனிதன் உலகத்திற்கு ஒரு கொள்கையை சொன்னால் அதன் மூலம் புகழ் அடையவேண்டும் என்று விரும்புவான். அவரை துதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், எழுந்து மரியாதைச் செய்ய வேண்டும், காலிலே விழவேண்டும், கண்ணை மூடிக் கொண்டு என்ன சொன்னாலும் சிந்திக்காமல் கேட்க வேண்டும். இப்படித்தான் ஒரு மனிதன் ஆசைப் படுகிறான். புகழ் அதிகமானால் இப்படிப் பட்ட எண்ணங்கள் மனிதனிடம் அதிகமாகிக் கொண்டே பொகும்.

நபிகள் நாயகம் அவர்கள் இரண்டு விதமான புகழை அடைந்தார்கள். ஒன்று கடவுளின் தூதர் என்று சொல்லி ஆன்மீகத்தில் ஒரு தலைமை . இரண்டாவது இந்த கொள்கையின் மூலமாக அவர்கள் ஒரு ஆட்சியையும் அவர்கள் நிறுவி , ஆட்ச்சித் தலைமையையும் வகித்தார்கள். தனது 53 வயதில் மதீனா நகரம் சென்று ஆட்ச்சியை நிறுவி பத்தாண்டுகாலம் யாரும் அசைக்க முடியாத அரபு நாட்டு அதிபராகவும் இருந்தார்கள். நபிகள் அவர்கள் ஆன்மிகத் தலைவராகவும், ஆட்ச்சித் தலைவராகவும் இருந்தார்கள். ஒரு மனிதர் இந்த இரண்டையும் பெற்றிருந்தால் அவர் ஆனவம், அகம்பாவம், அகந்தை, பெருமை கொண்டவராகவே எந்த மனிதரும் காணப் படுவார். ஆனால் புகழின் உச்சிக்கே சென்ற அந்த நேரத்திலும்கூட , இந்த மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் அறிவுரைகளை நாம்கேட்கும் போது ஆச்சரியப் பட்டுப் போகிறோம். இனி வரும் தொடர்களில் நபிகள் நாயகம் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.

0 comments:

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க

About This Blog

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம் (இதை அவர்கள் விளங்க மாட்டார்களா ? திருக்குர்ஆன் 36:68

Lorem Ipsum

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும்,வீனும் தவிற வேறில்லை.(இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?. 6.32

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP